முகப்புகோலிவுட்

நட்சத்திர கலை விழாவில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?

  | January 10, 2018 13:46 IST
S Ve Shekher

துனுக்குகள்

  • கடந்த ஜனவரி 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நட்சத்திர கலை விழா நடைபெற்றது
  • பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்
  • இவ்விழாவில் ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் கலந்து கொள்ளவில்லை
நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் கடந்த ஜனவரி 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நட்சத்திர கலை விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னணி நடிகர்களான ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் கலந்து கொள்ளவில்லை. தற்போது, அஜித் ஏன் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ளவில்லை என பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர் “அஜித் விழாவில் பங்கேற்க வேண்டுமென்று நடிகர் சங்கம் சார்பில் அழைத்தபோது அவர் “மக்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

அதன் மூலம் தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால், நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர்களாகிய நாமே நிதி அளிக்கலாம். அதை தவிர்த்து ஏன் நட்சத்திர கலைவிழா நடத்தி மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும்’ என்று அஜித் கேட்டார்” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்