முகப்புகோலிவுட்

ரஜினியை காலி செய்த அஜித்

  | January 06, 2019 23:44 IST
Petta Trailer

துனுக்குகள்

  • பொங்கலுக்கு இப்படம் வெளிவர இருக்கிறது
  • சமூகவலைதளங்களில் தொடர்ந்து முதலிடம்
  • பொங்கலுக்கு செம ட்ரீட் கொடுக்கவிருக்கும் அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்” . இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், பாடல் என எல்லாம் ரசிகர்களிடையே ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  இப்படத்தின் டிரைலர் வெளியாகி மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது.

 இதுவரை  தென் இந்திய சினிமா எதுவும்  செய்யாத புது வரலாறு படைத்துள்ளது “விஸ்வாசம்”. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற, முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான் என்கிற சாதனையை படைத்துள்ளது.  சமூக வலை தளங்களில் தொடர்ந்து முதலிடத்தில்  உள்ளது. ரஜினியின்  'பேட்ட' படத்தின் டிரைலரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் 'விஸ்வாசம்' முறியடித்துள்ளது. அஜித் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

இதன் மூலம் ரஜினிக்கும், அஜித்திற்கும் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. பொங்கலுக்கு பார்ப்போம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்