முகப்புகோலிவுட்

ரஜினி, விஜய் இருவரையும் பின்னுக்கு தள்ளிய அஜித்- விஸ்வாசம் வசூல் சாதனை

  | January 11, 2019 18:14 IST
Viswasam

துனுக்குகள்

  • ஒரே நாளில் 30 கோடி வசூலில் விஸ்வாசம்
  • நேற்று வெளியானது அஜித்தின் விஸ்வாசம்
  • ரஜினியின் பேட்ட திரைப்படத்தோடு போட்டியிட்டது விஸ்வாசம்
அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகி நேற்று வெளியான படம் விஸ்வாசம். அதே போல் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வெளிவந்த படம் “பேட்ட”.  தல மற்றும் தலைவர் படம் இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போல் இருந்தது. இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கே பல திரையரங்குகளில் விஸ்வாசம் திரைப்படம் வெளியிடப்பட்டது. ரஜினியின் பேட்ட அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது.   பல தியேட்டர்களில் வெளியிட படவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாள் வசூலில் விஸ்வாசம் 30 கோடி வசூலித்ததாகவும், ரஜினியின் பேட்ட 20 கோடி வசூலித்ததாகவும் திரைப்பட வினியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
 
இந்த மதிப்பீடு தமிழ்நாட்டிற்கு மட்டும் என்பது குறிப்பிட தக்கது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பேட்ட திரைப்படம் விஸ்வாசத்தை முந்தியிருக்கும் என்பது கணிப்பு.
 
விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார் திரைப்படம் ஒரேநாளில் 25 கோடி வசூலித்ததாக தகவல் அப்போது வந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறது விஸ்வாசம்  என்பது குறிப்பிட தக்கது. இருப்பினும் இந்த செய்தியும் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க திருவிழா சாதியை ஒழிக்குமா? - “விஸ்வாசம்” என்ன சொல்கிறது...
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்