முகப்புகோலிவுட்

“விஸ்வாசம்” படத்திற்கு திடீர் தடை நீக்கம்- ரசிகர்கள் உற்சாகம்!

  | January 09, 2019 18:33 IST
Viswasam

துனுக்குகள்

  • அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள படம் இது
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • சிவா இப்படத்தை இயக்கிஇருக்கிறார்
பொங்கல் பண்டிகையையொட்டி விஸ்வாசம் மற்றும் பேட்ட  திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கிறது.  இதில் சிவாவின்  இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் படம் விஸ்வாசம்.
 
விஸ்வாசம் படத்திற்கு தொடற்சியாக தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது என அஜித் ரசிகர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
 
இந்நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி ரூ.78 லட்சத்தை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்குத் தொடர்ந்தார். இதனால் அந்த பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.
 
இந்த தடை உத்தரவை நீக்ககோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் கடனைத் திருப்பி செலுத்துவதாகவும், அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றதில் முறையிட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி ரூ.78 லட்சம் ரூபாயில் முதலாவதாக ரூ.35 லட்சத்தை திருப்பித் தர சம்மதம் தெரிவித்ததாகவும், மீதமுள்ள பணத்தை 4 வாரங்களுக்குள் தருவதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்ததை அடுத்து இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதி அஜித் ரசிகர்கள் கொதித்துபோய் இருந்தனர் அவர்களக்கு நல்ல செய்தியாக இந்த தீர்வு வந்திருப்பது அஜித் ரசிகர்களை தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர். 


மேலும் படிக்க - “விஸ்வாசம்” நயன்தாரா மானேஜர் புதிய முயற்சி
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்