முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தை கைப்பற்றிய சன் குழுமம்

  | December 07, 2018 14:38 IST
Viswasam

துனுக்குகள்

  • இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியு
  • படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘வீரம், வேதாளம்' படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்'. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, ரவி அவானா, முக்தர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி' அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்