‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்.
அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த ஷெடியூலுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறதாம்.படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ்