முகப்புகோலிவுட்

தலயா?, தலைவரா? பொங்களுக்கு மோதும் ரஜினி!-அஜித்!

  | January 06, 2019 23:32 IST
Petta  Trailer

துனுக்குகள்

  • பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.
  • விஸ்வாசம் டிரைலர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது
  • ரஜினியோடு போட்டி போடுகிறார் அஜித்
தல அஜித்தும் இயக்குனர் சிவாவும் நான்காவது முறை இணையும் திரைப்படம் விஸ்வாசம். இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடலும் டிரைலரும் வெளியாகி பட்டையக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலரைப்பற்றி இப்போது பார்ப்போம்.

“வாழ்க்கையில ஒரு தடவ கூட அழாத பணக்காரன் கிடையாது, ஒருதடவ கூட சிரிக்காத ஏழையும் கிடையாது”னு மாஸாசான வசனத்தோடு டிரைலர் தொடங்குகிறது.
இந்த சீன் முடிஞ்சதும் கிராமத்தில் இளைஞனாக இருக்கும் அஜித்தை காட்டுகிறார்கள். “இங்க இருக்குற அத்தனைப்பேருக்கும் வக்காலத்து வாங்கி ரத்தம் சிந்தி இருக்காரு, சிந்துன ரத்தத்திற்கு சொந்தம் வராமலா போயிடும்” என்று ரோபோ சங்கர் பின் குரலில் பேசுகிறார்.

இதைப்பார்க்கும் போது ஊருக்காக வக்காலத்து வாங்கும்  ஹீரோவாக இருக்கிறார் அஜித் என்று தெரிகிறது.

நடுவுல அஜித்தோட மாஸான சண்டை காட்சிகள் வந்து போகிறது.
வில்லன் “என் கதையில நான் ஹீரோடா என்று சொல்ல அஜித் என் கதையில நான் வில்லன்டான்னு ரன்னிங் கமெண்ட் பண்றாரு.

இடையில் பைக் வீலிங் ஸ்டண்ட் சீன் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
மும்பை, தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு கிராமம் என ஒரு சில காட்சிகளில் பின்னாடி இருக்கும் இந்தி, எழுத்துகளும் தமிழ் எழுத்துகளும் காட்டிக்கொடுக்கின்றன.

இதிலிருந்து ஊரில் ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அஜித்தை திருமணம் செய்து முப்பைக்கு அனுப்பி வைக்கிறார்ளோ என்று தோன்றுகிறது. மீண்டும் அவர் கிராமத்திற்கு ரீஎண்ட்ரி ஆகி வில்லனை காலி செய்வார் போலதான் கதை இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.
 
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்ன வென்றால் , விஸ்வாசத்தின் டிரைலர் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னேதான் ரஜினியின் “பேட்ட” டிரைலர் வெளியானது. இந்த பேட்ட படத்தின் டிரைலரையும், விஸ்வாசத்தின் டிரைலரையும் பார்க்கும் பேட்ட படத்திற்கு கமெண்ட் செய்கிற மாதிரி அமைந்திருக்கிறது.

பேட்ட டிரைலரில் ரஜினி “யாருக்காச்சும் பொண்டாட்டி, புள்ள அப்படினு செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிடு, கொல காண்டுல இருக்கேன்னு” சொல்லுவாரு, அந்த வசனத்திற்கு பதில் சொல்வது போல  விஸ்வாசம் டிரைலரில் அஜித் “ என் பொண்டாட்டி  நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்தை வா” என்கிற வசனம் இடம் பெற்றிருக்கிறது.

பேட்ட படத்தில் ரஜினி ‘கொல காண்டுல இருக்கே'ன்னு சொல்ல விஸ்வாசம் டிரைலரில்  “உங்கள பார்த்தா கொல கோவம் வரனும் ஆனா என்ன பண்றது உங்கள புடிச்சிருக்கு சார்” என்று அஜித் பதில் சொல்லுற மாதிரி வந்திருக்கு. அஜித் ரசிகர்கள் இந்த இரண்டு வீடியோவையும் எடுத்து எடிட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்த பொங்கலுக்கு நமக்கு டபுள் தமாக்கா என்பது நிச்சயம்.
இரண்டு படங்களும் அதிரடியாக இருப்பதால் இந்த பொங்கல் மிகச்சிறப்பாக செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்