விளம்பரம்
முகப்புகோலிவுட்

ட்ரெண்டாகி வரும் ‘தலைவர் 164’

  | May 18, 2017 15:05 IST
Movies

துனுக்குகள்

  • ‘கபாலி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கவுள்ளார்
  • ‘#தலைவர்161’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்திற்கு பிறகு ஷங்கரின் ‘2.0’-வில் நடித்து வருகிறார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தை பா.இரஞ்சித் இயக்கவுள்ளார். ஏற்கெனவே, இவர்கள் காம்போவில் கடந்த வருடம் ரிலீஸான ‘கபாலி’ திரைப்படம் மெகா ஹிட்டானது. அதனால், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

தமிழ் சினமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரும், சூப்பர் ஸ்டாரின் மருமகனுமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மூலம் இதனை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இதன் போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ரஜினியின் 161-வது படம் என்பதால், கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து ட்விட்டப்படும் செய்திகளுக்கு ‘#தலைவர்161’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வந்தனர் நெட்டிசன்ஸ். இந்நிலையில், இதுவரை சூப்பர் ஸ்டார் ‘2.0’வுடன் சேர்த்து 163 படங்கள் நடித்துள்ளதாகவும், தற்போது இரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ரஜினியின் 164-வது படம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், ‘#தலைவர்164’ என்ற ஹேஷ்டேக் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. மும்பை தாராவி பகுதி போல் சென்னையில் போடப்பட்டு வரும் பிரம்மாண்ட செட்டில் வருகிற மே 28-ஆம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங்கை பூஜையுடன் துவங்கவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்