முகப்புகோலிவுட்

‘சர்கார்’ சர்ச்சை - மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

  | December 07, 2018 19:03 IST
Sarkar

துனுக்குகள்

  • விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது
  • விஜய் ரசிகர்கள் இருவர் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியா
  • இது குறித்து வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது
தமிழில் அட்லியின் ‘மெர்சல்' படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள ‘சர்கார்' படம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியிருந்தார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, பல தியேட்டர்களில் ‘சர்கார்' படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

இதற்கிடையே, விஜய் ரசிகர்கள் எனக் கூறி இருவர் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கீழ்த்தரமான வார்த்தைகளில் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியானது. இது குறித்து சைபர் க்ரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, புலன் விசாரணையில் மேற்படி வீடியோவில் மிரட்டிய நபர்கள் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை பதிவு செய்து வெளியிட்டவரின் பெயர் அனிஷேக் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சஞ்சய் மற்றும் அனிஷேக் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்