விளம்பரம்
முகப்புகோலிவுட்

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறவில்லை

  | March 17, 2017 15:43 IST
Movies

துனுக்குகள்

  • அஜித் -சிவா கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம் சூப்பர் ஹிட்
  • சமீபத்தில் விவேகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • இறுதி கட்டப் படப்பிடிப்பில் விவேகம் திரைப்படம்
'தல' அஜித், இயக்குநர் சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் திரைப்படத்தின் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ டுக்கு பின் ஹாட்ரிக் வெற்றி கொடுக்க தயாராகி வரும் திரைப்படம் 'விவேகம்'.

சமீபத்தில் விவேகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'தல' அஜித் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. 

ஆனால், தற்போது நமக்கு கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி விவேகம் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெறவில்லையாம், மாறாக செர்பியா என்ற நாட்டில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறதாம், இதற்காக ஏற்கனவே செர்பியாவிற்கு படக்குழு சென்று விட்டதாகவும் சமீபத்தில் தான் தல அஜித் அவர்களும் செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாகவும் தகவலகள் கிடைத்துள்ளது, சுமார் 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்