முகப்புகோலிவுட்

தம்பி இராமையா இயக்கி, நடித்துள்ள ‘மணியார் குடும்பம்’ எப்போது வெளியீடு?

  | July 12, 2018 11:25 IST
Maniyar Kudumbam

துனுக்குகள்

  • குணச்சித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் நடித்தவர் தம்பி இராமையா
  • இப்படத்தில் ஹீரோவாக தம்பி இராமையாவின் மகன் உமாபதி நடித்துள்ளார்
  • இதன் பாடல்கள் & டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
தமிழில் ‘மலபார் போலீஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தம்பி இராமையா. இதனையடுத்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் நடித்துள்ளார். மேலும், ‘மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது, தம்பி இராமையா நடித்து, இயக்கியுள்ள புதிய படம் ‘மணியார் குடும்பம்’. இப்படத்தில் ஹீரோவாக தம்பி இராமையாவின் மகன் உமாபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிருதுளா முரளி, யாஷிகா ஆனந்த் என டபுள் ஹீரோயின்ஸாம். முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளாராம்.

தம்பி இராமையாவே இசையமைத்துள்ள இதற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தை வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்