முகப்புகோலிவுட்

விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு விருது

  | March 30, 2018 10:37 IST
Mersal Movie Scenes

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார்
  • இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் கடந்த ஆண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’. இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இங்கிலாந்து நாட்டின் 4-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில், ‘மெர்சல்’ படத்திற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் ‘மெர்சல்’ டீம் செம குஷியாகியுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்