முகப்புகோலிவுட்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ

  | November 10, 2017 16:25 IST
Theeran Adhigaaram Ondru Movie Making Video

துனுக்குகள்

  • இதில் கார்த்தி நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்துள்ளார்
  • இதன் பாடல்கள் & டிரையிலர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது
‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு கார்த்தி கைவசம் வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, பாண்டிராஜ் படம், ரஜத் ரவிசங்கர் படம் ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில், கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக வலம் வரவுள்ளாராம். இந்த படத்தின் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ‘வேலாயுதம், தலைவா’ புகழ் அபிமன்யு சிங் நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட டீஸர், டிரையிலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. ஏற்கெனவே, படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிரட்டலான இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்