விளம்பரம்
முகப்புகோலிவுட்

செம லைக்ஸ் குவிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பாடல்கள்

  | November 02, 2017 15:45 IST
Theeran Adhigaaram Ondru Songs

துனுக்குகள்

  • கார்த்தி கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • இதில் கார்த்தி நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்துள்ளார்
  • ‘செவத்த புள்ள’ எனும் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்றது
‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு கார்த்தி கைவசம் வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, பாண்டிராஜ் படம், ரஜத் ரவிசங்கர் படம் ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில், கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக வலம் வரவுள்ளாராம். இந்த படத்தின் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், ‘வேலாயுதம், தலைவா’ புகழ் அபிமன்யு சிங் நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.சிவனந்தீஷ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் உருவாகி வரும் இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 
சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட டீஸர், டிரையிலர் மற்றும் ‘செவத்த புள்ள’ எனும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, அனைத்து பாடல்களையும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்