முகப்புகோலிவுட்

‘கோலமாவு கோகிலா’ படத்தின் ‘திட்டம்போட தெரியல’ பாடல் டீசர்

  | July 30, 2018 13:06 IST
Kolamaavu Kokila Song Teaser

துனுக்குகள்

  • இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார்
  • இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்
  • படத்தை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலகிருஷ்ணாவின் ‘ஜெய் சிம்ஹா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம், சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ (கோகோ) படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘திட்டம்போட தெரியல’ என்ற பாடலின் வீடியோ டீசரை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்