முகப்புகோலிவுட்

மீண்டும் விஜய்யுடன் ‘துப்பாக்கி 2’, அஜித்துடன் ஒரு மாஸ் படம் – ஏ.ஆர்.முருகதாஸ்

  | December 05, 2018 15:53 IST
Ar Murugadoss

துனுக்குகள்

  • ‘சர்கார்’ விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்
  • மீண்டும் விஜய், அஜித்துடன் இணைவது பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்
மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்' படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘சர்கார்'. இதில் ஹீரோவாக ‘தளபதி' விஜய் நடித்திருந்தார். இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் “விஜய்யின் ‘துப்பாக்கி, கத்தி' ஆகிய 2 படங்களில், எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முருகதாஸ் “துப்பாக்கி படத்தின் 2-ஆம் பாகத்தை எடுப்பதற்கான ஐடியா இருக்கிறது” என்று கூறினார். மேலும், “தீனா படத்துக்கு பிறகு மீண்டும் அஜித் – முருகதாஸ் கூட்டணி எப்போது அமையும்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முருகதாஸ் “அஜித் சாருக்காகவே ஒரு மாஸான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வச்சுருக்கேன். அவர் எப்போ என்னை கூப்பிட்டாலும் பண்ணிடலாம்” என்று தெரிவித்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்