விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஷாலின் ‘துப்பறிவாளன்’ எப்போது வெளியீடு?

  | August 12, 2017 13:26 IST
Thupparivaalan

துனுக்குகள்

  • விஷால் கைவசம் 7 படங்கள் உள்ளது
  • இப்படம் ‘செர்லாக் ஹோம்ஸ்’ நாவல் ஸ்டைலில் இருக்குமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் செம லைக்ஸ் குவித்தது
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் நடித்த சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’ சில வருடங்களாகவே வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ மற்றும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தை வருகிற செப்டெம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்