விளம்பரம்
முகப்புகோலிவுட்

இக்கதை வி.ஐ.பி 2 படத்திற்கு சரியாக இருக்குமென்று தனுஷிடம் கூறினேன் - சவுந்தர்யா ரஜினி காந்த்

  | August 11, 2017 12:19 IST
Soundarya Rajinikanth Interview

துனுக்குகள்

  • படையப்பா திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார் சவுந்தர்யா
  • பல்வேறு ரஜினி படங்களில் கிராஃபிக்ஸ் கலைஞராக வேலைப்பார்த்துள்ளார்
  • இவர் இயக்கிய கோச்சடையான் தான் இந்தியாவின் முதல் முழு அனிமேஷன் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினி காந்த் இயக்குனர் ஆவதற்கு முன்பாகவே கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞராக 1999 ஆம் ஆண்டு 'படையப்பா' திரைப்படம் மூலம் அறிமுகமானார், அதன் பின் பல திரைப்படங்களில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றிய இவர் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் 'கோச்சடையான்' மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார், அதன் பின் மூன்று ஆண்டுகளாக இயக்கத்தை பற்றி சிந்திக்காமல் இருந்த சவுந்தர்யா தற்போது நடிகர் தனுஷ் கதை, 'வி கிரியேஷன்' தயாரிப்பில் உருவான வி.ஐ.பி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நாளை இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து சவுந்தர்யா ரஜினி காந்த் பேசிய தொகுப்புகளை சற்று ரீவைண்ட் செய்து பார்ப்போம்:-

"கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து இப்படத்தை இயக்கி இருப்பதில் மகிழ்ச்சி முதலில் இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு தனுஷ் என்னிடம் விவரித்தார் அதற்க்கு முன் வி ஐ பி திரைப்படத்தை இரண்டாம் பாகத்தின் உருவாக்கத்தை பற்றியும் நாங்கள் நிறையவே பேசி இருந்தோம், இந்த கதையை வி ஐ பி 2 திருப்பிடத்திற்கு போர்த்துமாக இருக்குமே, அந்த படத்தில் வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இதற்க்கு கச்சிதமாக பொருந்தும் என்றேன், கொஞ்சம் நேரம் யோசித்த தனுஷ், நீ சொல்வது சரி தான் இந்த கதை வி. ஐ. பி 2 விற்கு மிக சரியாக பொருந்தும் என்றார், அதன் பின் தான் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ். தாணு கதை கேட்டார், மறு நிமிடமே ஒப்புக்கொண்டார், படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக துவங்கி விரைவில் வெளியாக உள்ளது என்பது மிகந்த மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.
வி.ஐ.பி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது அதன் பின் இந்த பாகத்தை நீங்கள் இயக்கி உள்ளீர்கள் இயற்கையாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்துமக்களிடத்திலும் உள்ளது, இதனை எப்படி சமாளித்தீர்கள் "நீங்கள் சொல்வது உண்மை தான், முதல் படம் மிக பெரிய வெற்றி அடைந்ததால் இரண்டாம் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் மிக கவனமாக அமைக்க வேண்டி இருந்தது, படத்தின் பெரும்பாலான கட்சிகளுக்கு முதல் படத்தின் நீட்சி ஏதேனும் உள்ளது என்பதை பார்த்து பார்த்து இயக்க வேண்டியதிருந்தது, அதையும் தாண்டி இப்படம் மிக அருமையாக உருவாகி உள்ளது அதற்க்கு தனுஷின் நடிப்பும் மிக முக்கிய காரணம்" என்றார்.

தனுஷ் என்று முடித்தால் கேட்கிறோம் தனுஷ் உங்களுடைய உறவினர், அவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களை திரையில் பார்த்திருப்பீர்கள், படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக அவர் எப்படி நடந்துக்கொண்டார், "இயக்குனர்களின் நடிகர் என்று அவரை கூறலாம் இந்த காட்சிக்கு இப்படி தான் நடிக்க வேண்டும் என்று நாம் சொன்ன உடனே தயாராகி விடுவார், காட்சி எடுத்து முடித்த பின்னர் நான் எண்ணிய அளவிற்கு அது சிறப்பாக இல்லை என்று சொன்னால் யோசிக்காமல் மீண்டும் நாம் எவ்வாறு கூறுகிறோமோ அப்படி நடித்துக்கொடுப்பார், தற்போது ஹாலிவுட் படங்கள் உட்பட பல படங்களில் நடித்திக்கொண்டிருந்தாலும் கூட எங்களுடைய பயணத்திட்டத்தில் சிறு மாறுதல்கள் கூட அவரால் ஏற்பட்டதில்லை".

கஜோல் பற்றி "அவர் இந்த படத்தின் மற்றொரு பலம் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்க வந்தது அதிலும் குறிப்பாக என்னுடைய இயக்கத்தில் நடிக்கவந்தது மிக்க மகிழ்ச்சி, ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு தளத்தில் எங்களை அவருடைய நடிப்பு திறமையால் ஈர்த்துக்கொண்டே இருப்பார், ஒவ்வொரு இடத்திலும் அவருடைய அனுபவம் எங்களுக்கு படமாக அமையும் திரையில் அவரை பார்க்கும் பொது நிச்சயம் மக்கள் அவரை ரசிப்பார்கள் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்