விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஏ.ஆர். ரஹ்மானிற்கு வெள்ளிவிழா – ஆந்திர அரசு அசத்தல் திட்டம்

  | September 12, 2017 11:37 IST
Ar Rahman Songs

துனுக்குகள்

  • ஏ.ஆர்.ரஹ்மான் திரை துறையில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டது
  • 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
  • சமீபத்தில் ரஹ்மான் நடிப்பில் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் வெளியானது
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானிற்கு வெள்ளிவிழா நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1992-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் திரையிசை உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இதனையொட்டி ரஹ்மானை கவுரவப்படுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு காக்கிநாடா பகுதியில் மிக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த விழா ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் எனவும், அதில் அவருடன் பங்கேற்கும் கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் ஆந்திர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்