முகப்புகோலிவுட்

குழந்தை தொழிலாளர் கொடுமைக்கு எதிராக நடிகை த்ரிஷா!

  | June 14, 2018 12:27 IST
Trisha

துனுக்குகள்

  • UNICEF தூதுவராக த்ரிஷா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்
  • சமீபத்தில் இந்த அமைப்பின் சார்ப்பாக நிகழ்வு ஒன்று நடந்தது
  • குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் எனப் பேசினார் த்ரிஷா

UNICEF அமைப்பின் சார்பாக, கடந்த ஆண்டு குழந்தைகள் நலன் மற்றும் உரிமைக்கான தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டார். அப்பொழுது முதல் தொடர்ந்து பல சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தன் குரலை பதிவு செய்யும் நடிகை த்ரிஷா, தற்பொழுது குழந்தை தொழிலாளர் கொடுமைக்கு எதிரான பேரணி ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.

UNICEF மற்றும் தமிழக அரசின் சார்பாக உலக குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில், சென்னை ஆட்சியர் திரு.அன்புச்செல்வன் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் கமிஷனர் திரு.நந்தகோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை த்ரிஷா "எல்லா குழந்தைகளுக்குமே கல்வி இன்றியமையாதது. எல்லா குழந்தைகளுமே பள்ளிக்கு செல்ல வேண்டும். தரமான கல்வியையும், நல்ல தூய்மையான சுற்றுச்சூழலையும் எல்லா குழந்தைகளுக்கும் தர வேண்டியது நம் கடமை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் கொடுமையை தடுப்போம்" என கூறினார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்