முகப்புகோலிவுட்

"முதன் முறையா `மோகினி'லதான் இதை செய்திருக்கேன்" - த்ரிஷா

  | July 23, 2018 15:31 IST
Mohini Movie

துனுக்குகள்

  • மாதேஷ் இயக்கியிருக்கும் படம் `மோகினி'
  • த்ரிஷா இதில் நாயகியாக நடித்திருக்கிறார்
  • ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது
விஜய் நடித்த `மதுர', விஜயகாந்த் நடித்த `அரசாங்கம்' போன்ற படங்களை இயக்கியவர் மாதேஷ். இவர் தற்போது த்ரிஷா நடிப்பில் `மோகினி' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய த்ரிஷா, "இந்த நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. முதல்ல லக்ஷ்மன் சார், மற்றும் மாதேஷ் சாருக்கு நன்றி சொல்ல விரும்பறேன், இந்தப் படத்தை எனக்குக் கொடுத்ததற்காக. நாயகியை மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம், அதுவுமில்லாம எனக்கு ரொம்பப் பிடிச்ச `ஹாரர்' ஜானர்ல உருவாகியிருக்கு. இன்னொரு விதத்திலும் இது எனக்கு முக்கியமான படம். முதல் முறையா நான் டூயல் ரோல்ல நடிச்சிருக்கேன். வைஷ்ணவி மற்றும் மோகினினு இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்துக்காக எவ்வளவு வியர்வை சிந்தி உழைச்சிருக்கோம்னு எனக்கு நல்லா தெரியும். படத்தில் தரத்தில் எந்த சமரசமும் செய்யல, அதுவுமில்லாம 80 சதவீதத்திற்கும் மேல் லண்டனில் படமாக்கப்பட்ட முதல் ஹாரர் படம் 'மோகினி' தான். ஒரு விஷுவல் ட்ரீட்டா இருக்கும் இந்தப் படம்." எனப் பேசினார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்