முகப்புகோலிவுட்

மீண்டும் ‘சாமி ஸ்கொயர்’யில் இணைந்த த்ரிஷா

  | January 08, 2018 14:29 IST
Saamy 2 Cast

துனுக்குகள்

  • ‘சாமி’ படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • கருத்து வேறுபாடு காரணமாக ‘சாமி ஸ்கொயர்’யிலிருந்து விலகுவதாக த்ரிஷா கூறியி
  • இப்படத்தில் 5 பாடல்கள், 4 சண்டைக் காட்சிகள் உள்ளதாம்
‘இருமுகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘சாமி ஸ்கொயர்’-யில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் அப்பா, மகன் என விக்ரம் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

‘சாமி’யில் விக்ரமுக்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்த த்ரிஷா, படக்குழுவினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘சாமி ஸ்கொயர்’யிலிருந்து விலகுவதாக சமீபத்தில் டிவிட்டியிருந்தார். இந்நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் இயக்குநர் ஹரி பேசுகையில் “இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என 2 நாயகிகள் நடித்து வருகிறார்கள்” என்று கூறி த்ரிஷா நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், படத்தில் 5 பாடல்கள், 4 சண்டைக் காட்சிகள், 2 சேஸிங் காட்சிகள் இருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார். படத்தை வருகிற ஜூன் 14-ஆம் தேதி ராம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்