முகப்புகோலிவுட்

அதிரடி ஆக்ஷன் படத்தில் த்ரிஷா…!

  | April 20, 2019 17:02 IST
Raangi

துனுக்குகள்

  • எம்.சரவணன் இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது
  • பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது
‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.
பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் த்ரிஷா. அதன் அடிப்படையில் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.
 
பேட்ட படத்தை அடுத்து சிம்ரன், த்ரிஷா இருவரும் சேர்ந்து சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்கள். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் வெளிவர தயாராகி இருக்கின்றன.
 
இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்