விளம்பரம்
முகப்புகோலிவுட்

உதயநிதியின் புதிய பட ஷூட்டிங் ஓவர்

  | May 18, 2017 17:53 IST
Movies

துனுக்குகள்

  • உதயநிதி கைவசம் 3 படங்கள் உள்ளது
  • தற்காலிகமாக ‘இப்படை வெல்லும்’ என டைட்டில் வைத்துள்ளனர்
  • உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘தூங்கா நகரம்’ கெளரவ் படம், தளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘இரும்பு திரை’ மித்ரன் இயக்கவுள்ள புதிய படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் கெளரவ் இயக்கி வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘இப்படை வெல்லும்’ என டைட்டில் வைத்துள்ளனர். உதயநிதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ புகழ் மஞ்சிமா மோகன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் 9-வது படமான இதன் ஷூட்டிங் நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாம்.
 
ippadai vellum

சமீபத்தில், உதயநிதி தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை துவங்கினார். படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்