முகப்புகோலிவுட்

கமலின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ப்ளான்

  | December 27, 2018 14:22 IST
Kamal Haasan Indian 2

துனுக்குகள்

  • இந்தியன் 2-விலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்
  • இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது
  • இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்
ரஜினியின் '2.0' படத்துக்கு பிறகு இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது.

இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகர் வெண்ணிலா கிஷோர் காமெடியில் கலக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்துக்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சி மற்றும் உக்ரேனில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்