முகப்புகோலிவுட்

‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ டிவிட்டிய ‘வா முனிம்மா’ பாடல் டீஸர்

  | December 05, 2017 11:39 IST
Vaa Munimma Song Teaser

துனுக்குகள்

  • இதற்கு நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்துள்ளார்
  • இப்பாடலை டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இணைந்து பாடியுள்ளனர்
  • இதன் ஆடியோவை நாளை (டிசம்பர் 6-ஆம் தேதி) வெளியிடவுள்ளனர்
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்துள்ள இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட டிரையிலர், அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ பாடல் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ‘காதல் தேவதை’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘வா முனிம்மா’ எனும் பாடலின் டீஸரை ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இணைந்து பாடியுள்ள இப்பாடலின் டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தின் ஆடியோவை நாளை (டிசம்பர் 6-ஆம் தேதி)-யும், படத்தை டிசம்பர் 22-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்