விளம்பரம்
முகப்புகோலிவுட்

டிராப்பானதா ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ – ஷாக் மோடில் வடிவேலு ரசிகர்கள்

  | October 05, 2017 17:22 IST
Imsai Arasan 24am Pulikecei

துனுக்குகள்

  • முதல் பாகமான ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ மெகா ஹிட்டானது
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது
  • இதில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடித்து வந்தார்
விஜய்யின் ‘புலி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவன் இயக்கி வந்த புதிய படம் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகமான ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’-யில் வைகைப்புயல் வடிவேலு டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். ‘புலிகேசி – 1’ஐ தயாரித்த இயக்குநர் ஷங்கரே பார்ட் 2-வையும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’வுடன் இணைந்து தனது ‘S பிக்சர்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தார்.

இதில் வடிவேலு மூன்று வேடங்களில் நடித்து வந்ததாக கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடித்து வந்தார். ஜிப்ரான் இசையமைத்து வந்த இதற்கு ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்து வந்தார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரண்மனை செட்டும் போடப்பட்டது. தற்போது, சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் நின்றுவிட்டதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், இச்செய்தியால் ‘வைகைப்புயல்’ ரசிகர்கள் ஷாக் மோடில் உள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்