முகப்புகோலிவுட்

புதிய படத்துக்கு பூஜை போட்ட வைபவ்

  | September 24, 2018 14:27 IST
Vaibhav

துனுக்குகள்

  • வைபவ் கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கவுள்ளார்
  • இதன் ஷூட்டிங் இன்று முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாம்
‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் கைவசம் ‘காட்டேரி, ஆர்.கே – நகர், டானா’ என மூன்று படங்கள் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க வைபவ் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கவுள்ளார். இதனை ‘வால்மேட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் கே.தினேஷ் கண்ணன் – கே.ஸ்ரீதர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். அருண்ராஜ் இசையமைக்கவுள்ள இதற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இதன் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாம். வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்