விளம்பரம்
முகப்புகோலிவுட்

யங் சூப்பர் ஸ்டாருடன் முதன் முறையாக கைகோர்த்த கவிப்பேரரசு

  | May 19, 2017 22:02 IST
Aaa Release Date

துனுக்குகள்

  • சிம்பு முதன்முறையாக நான்கு வேடங்களில் நடிக்கிறார்
  • இதில் தமன்னா, ஸ்ரேயா, சனா கான், நீத்து சந்திரா என 4 ஹீரோயின்ஸாம்
  • இரண்டு டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் செம வைரலானது
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இதில் சிம்புவுக்கு நான்கு வித்தியாசமான வேடங்களாம். யங் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, சனா கான், நீத்து சந்திரா என 4 ஹீரோயின்ஸாம். மேலும், மஹத் ராகவேந்திரா, மொட்ட ராஜேந்திரன், கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் கெஸ்ட் ரோலில் தோன்றவுள்ளாராம். 'குளோபல் இன்போடைன்மென்ட்' நிறுவனம் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, படக்குழுவால் ட்விட்டப்பட்ட மதுரை மைக்கேல் - அஸ்வின் தாத்தா டீசர் & ட்ரெண்டு சாங் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்ததோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் கூட்டியுள்ளது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து ஓப்பனிங் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு படத்திற்கு வைரமுத்து பாட்டு எழுதுவது இதுவே முதன்முறையாம். ‘ரத்தம் என் ரத்தம்’ என்ற இப்பாடலை கடந்த வாரம் சிம்புவின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சென்னையில் இந்த பாடலை பிரம்மாண்டமான முறையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. ‘AAA’-வின் முதல் பாகத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாகவும், இரண்டாம் பாகத்தை இவ்வருட இறுதியிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர். வெகு விரைவில் இசை & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்