முகப்புகோலிவுட்

தள்ளிப்போனது குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘வஞ்சகர் உலகம்’

  | August 29, 2018 10:27 IST
Vanjagar Ulagam Movie

துனுக்குகள்

  • ரொமாண்டிக் திரில்லர் ஜானரைக் கொண்ட இப்படத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • முதலில், படத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. மனோஜ் பீதா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முக்கிய வேடங்களில் சிபி புவனச்சந்திரன், விசாகன், சாந்தினி, அனிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ரொமாண்டிக் திரில்லர் ஜானரைக் கொண்ட இந்த படத்தை ‘Labyrinth ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இதற்கு ரோட்ரிகோ டெல் ரியோ ஹெரெரா – சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். முதலில், படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்