விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மாரி’யுடன் களமிறங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்

  | February 14, 2018 11:20 IST
Maari 2

துனுக்குகள்

  • இதில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
  • இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகுகிறது
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2’-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடி வருகிறார்.

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடங்களிலும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸும் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
 
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் வரலக்ஷ்மி சரத்குமாரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வரலக்ஷ்மியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்