முகப்புகோலிவுட்

வரலக்ஷ்மி செய்த காரியத்தால் நண்பர்கள் குஷி

  | January 05, 2018 15:22 IST
Varalaxmi Sarathkumar

துனுக்குகள்

  • ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலக்ஷ்மி
  • வரலக்ஷ்மி கைவசம் 7 படங்கள் உள்ளது
  • டிவிட்டரில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் வரலக்ஷ்மி
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சிம்புவின் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சசிகுமாரின் ‘தாரை தப்பட்டை’, அர்ஜுனின் ‘நிபுணன்’, மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான சிபிராஜின் ‘சத்யா’ படத்தில் வரலக்ஷ்மி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

தற்போது, வரலக்ஷ்மியின் கால்ஷீட் டைரியில் சர்ஜுனின் ‘எச்சரிக்கை’, விமலின் ‘காதல் மன்னன்’, பிரியதர்ஷினியின் ‘சக்தி’, கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’, வினய்யின் ‘அம்மாயி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.
 

இந்நிலையில், தனது நெருங்கிய நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் என்ட்ரியாகியுள்ளார். ஏற்கெனவே, வரலக்ஷ்மி சமூக வலைதளமான டிவிட்டரில் செம ஆக்டிவ்வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்