முகப்புகோலிவுட்

'விஜய் 62'ல் இணையும் வரலட்சுமி சரத்குமார்

  | March 05, 2018 16:23 IST
Varalaxmi Sarathkumar

துனுக்குகள்

  • விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • வரலக்ஷ்மி, விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறையாம்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும் நடைபெற்றது.
 
படத்தின் ஷூட்டிங் சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலக்ஷ்மி, விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறையாம். இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்