முகப்புகோலிவுட்

வெல்வெட் நகரத்திற்குள் என்ட்ரியான வரலக்ஷ்மி

  | April 12, 2018 12:23 IST
Velvet Nagaram Shooting Update

துனுக்குகள்

  • வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் 10 படங்கள் உள்ளது
  • இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது
  • இதில் வரலக்ஷ்மி பத்திரிக்கையாளராக நடிக்கிறாராம்
சிபிராஜின் ‘சத்யா’ படத்திற்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, விமலின் ‘கன்னி ராசி’, பிரியதர்ஷினியின் ‘சக்தி’, கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’, வினய்யின் ‘அம்மாயி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’, விஜய் 62, ஜெய்யின் ‘நீயா 2’, சரத்குமாரின் ‘பாம்பன்’, மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘வெல்வெட் நகரம்’ படத்தில் வரலக்ஷ்மி பத்திரிக்கையாளராக வலம் வரவுள்ளாராம். மேலும், முக்கிய வேடங்களில் அர்ஜை, ரமேஷ் திலக், ‘சூப்பர் சிங்கர்’ மாளவிகா, பிரகாஷ் ராகவன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்து வருகிறார். அச்சு ராஜாமணி இசையமைத்து வரும் இதற்கு பகத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ‘அருவி’ புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் பேசுகையில் “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்ஷன் த்ரில்லராக தயாராகும் படம் தான் ‘வெல்வெட் நகரம்’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலக்ஷ்மி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலக்ஷ்மி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ ரெடியாகுகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது” என்று மனோஜ்குமார் நடராஜன் கூறினார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்