முகப்புகோலிவுட்

வரலக்ஷ்மி பட டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

  | August 06, 2018 12:25 IST
Echarikkai Movie

துனுக்குகள்

  • ‘லக்ஷ்மி, மா’ குறும்படங்கள் இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார்
  • இதில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், வரலக்ஷ்மி நடித்துள்ளனர்
  • இப்படத்தை ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘லக்ஷ்மி, மா’ குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற சர்ஜுன்.கே.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’. இதில் கதையின் முக்கிய வேடங்களில் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இதற்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை சி.பி.கணேஷுடன் இணைந்து ‘டைம் லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் புதிய டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்