முகப்புகோலிவுட்

பாலா தனக்கான இடத்தை எப்போதும் விட்டு கொடுக்கப்போவதில்லை-"வர்மா" ட்ரெய்லர்

  | January 10, 2019 10:34 IST
Varma

துனுக்குகள்

  • வர்மா படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்
  • இப்படத்தை ‘E4 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • மேற்கு வங்காளத்து அழகி நடிகை மேகா நடித்திருக்கிறார்
கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி மெகா வசூலை குவித்த திரைப்படம், `அர்ஜுன் ரெட்டி.' இத்திரைப்படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார். விக்ரம் மகன் துருவ் இப்படத்தில்  ஹீரோவாக அறிமுகமாகிறார். துருவுக்கு ஜோடியாக மேற்கு வங்காளத்து அழகி நடிகை மேகா நடித்திருக்கிறார்.

முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், ஹாட் ரைஸா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை  ‘E4 என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. `அர்ஜுன் ரெட்டி' ரதன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
 
இந்தப் படத்தை பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள `வர்மா' திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியானது. ரீமேக் படம் என்றாலும் காட்சிக்குக் காட்சி மிரட்டி இருக்கிறார். பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
 
இந்த டிரைலெரைப் பொருத்தவரை இது ரீமேக் என்றாலும் இது பாலாவின் படம் என்பதை எளிமையாக சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எதிர்ப்பார்ப்பும், ஆச்சர்யமும், குழப்பமும் நிறைந்ததாகவே இருக்கிறது.
 

 
ஒரு காட்சியில் மருத்துவராக வரும் துருவ், திடீரென காதல்  தோல்வியில் சுத்தும் கிருக்கனாக இருக்கிறார். இது துருவிற்கு முதல் படம் என்பதால் பாலா எப்போதும் போல் வெச்சி செஞ்சிருக்கார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
படபடப்போடு அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர அமைதியை தேடித் திரியும் ஒருவனாய் தோன்றுகிறார் துருவ். இதற்கிடையில் ரைசா வில்சனின் ஹாட் சீன்ஸ் துருவ்வை ஆறுதல் படுத்துகிறது..

துருவின் கல்லூரி காலங்களுக்கு கொண்டு போகும் காட்சிகள் மாஸ் காட்டுகிறது. காதல்,அதிரடி ஆக்ஷன்,ரொமாண்டிக், காமம், கோபம், பயித்தியக்காரத்தனம் என மசாலாவை தூவி  இறைத்திருக்கிறார். பாலா தனக்கான இடத்தை எப்போது விட்டு கொடுக்கப்போவதில்லை என்பதை மீண்டும் நிரூப்பித்திருக்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்