முகப்புகோலிவுட்

பாலிவுட்டில் என்ட்ரியாகவுள்ள நடிகை வேதிகா

  | May 30, 2018 13:43 IST
Vedhika

துனுக்குகள்

  • ‘மதராஸி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா
  • தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வேதிகா நடித்துள்ளார்
  • இப்படத்தை ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார்
தமிழில் ‘மதராஸி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. இதனையடுத்து ‘முனி, பரதேசி, காவியத்தலைவன்’ போன்ற பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வேதிகா நடித்துள்ளார்.

தற்போது, வேதிகா பாலிவுட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தி பாடி’ (The Body) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘பாபநாசம்’புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரிஷி கபூர், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஹாரர் – த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இதனை ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – Azure எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்