விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘பார்ட்டி’ மோடுக்கு ஆக்டிவ் ஆகப்போகும் வெங்கட் பிரபு & டீம்

  | July 11, 2017 17:36 IST
Party Movie

துனுக்குகள்

  • ‘சென்னை 28 - 2’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • வெங்கட் பிரபு படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்
  • ஒரே ஷெடியூலில் இதன் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளனர்
‘சென்னை – 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கவுள்ள புதிய படம் ‘பார்ட்டி’ (PARTY). இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளதாம். வெங்கட் பிரபு படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால், ‘பார்ட்டி’யில் யுவனுக்கு பதிலாக வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைக்கவுள்ளார்.

‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். வழக்கமாக வெங்கட் பிரபு படங்களின் டைட்டிலுக்கு கீழே நச் டேக்லைன் இருக்கும். இந்த ‘பார்ட்டி’-க்கும் ‘A VENKAT PRABHU HANGOVER’ என போட்டுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் ஷூட்டிங்கை பிஜி தீவுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆகையால், ‘பார்ட்டி’ டீம் வருகிற ஜூலை 15-ஆம் தேதி பிஜி தீவுக்கு பறக்கவுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பை வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து 52 நாட்கள் நடத்தவுள்ளனர். ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனராம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்