விளம்பரம்
முகப்புகோலிவுட்

இணையத்தில் வைரலாகும் விஜய்61 ஃபோட்டோ

  | March 17, 2017 11:42 IST
Movies

துனுக்குகள்

  • ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது திரைப்படம்
  • 1980 கால கட்டங்களில் நடப்பது போல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது
  • இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக இப்படத்தில் நடித்து வருகிறார்
இளைய தளபதி விஜய் இப்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் 61 என்று பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பதாகவும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாகவும், படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள பணையூரில் நடப்பதாகவும் ஏற்கனவே நமக்கு செய்திகள் வெளியாகி இருந்தன இந்நிலையில்.

இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள 1980களில் நடக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குநர் அட்லீ. இந்நிலையில் இளையதளபதி விஜய், எஸ்.ஜே சூர்யா மற்றும் நித்யாமேனன் ஆகியோர் இருக்கும் ஒரு புதிய ஃபோட்டோ ஒன்று இணைத்தளங்களில் லீக்காகியுள்ளது, இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகியுள்ளது.

ஏற்கனவே, படங்களை பற்றி எதுவும் செய்திகளை வெளியிடவேண்டாம் என்று படக்குழுவினர் வேண்டுகோள் வைத்த மறுநாளே இந்த ஃபோட்டோ வெளியானது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்