விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஐரோப்பா பறக்கவுள்ள ‘தளபதி 61’ டீம்

  | April 25, 2017 11:14 IST
Vijay 61 Shooting

துனுக்குகள்

  • அட்லி – விஜய் காம்போவில் ரிலீஸான ‘தெறி’ மெகா ஹிட்
  • இப்படத்தில் இளைய தளபதி மூன்று வேடங்களில் நடிக்கிறார்
  • பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்
‘தெறி’ படத்தின் மெஹா ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இளைய தளபதி – அட்லி இணைந்துள்ள ‘தளபதி 61’ படத்தின் சுவாரஸ்ய அப்டேட்ஸ் தினமும் வந்த வண்ணமுள்ளது. ‘இளைய தளபதி’ விஜய் முதன் முறையாக அப்பா, இரண்டு மகன்கள் என ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்ஸாம். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத்தும் விறுவிறு திரைக்கதை எழுதியுள்ளாராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் என்.ராமசாமி மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.

இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி ஐரோப்பா பறக்கவுள்ளது ‘தளபதி 61’ டீம். அங்கு தொடர்ந்து ஒரு மாதம் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனராம். படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதியும், பாடல்களை ஆகஸ்ட் மாதமும், படத்தை அக்டோபர் மாதத்திலும் ‘இளைய தளபதி’ ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியிடவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்