முகப்புகோலிவுட்

“தளபதி 63” படப்பிடிப்பில் சிக்கல்….திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்குமா…?

  | February 02, 2019 12:19 IST
Vijay

துனுக்குகள்

  • அட்லி இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
  • அட்லி மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் விஜய்யுடன் இணைகிறார்
மெர்சல், தெறி, படங்களை தொடர்ந்து விஜய், அட்லி மூன்றாவதாக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.  இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்காமல் இருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு வரும் நடிகர் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு பணிகளை தொடர்வதில் இடையூறு ஏற்பட்டதாகவும், இடையூறுகள் இல்லாமல் படப்பிடிப்பு பணிகளை தொடர்வதற்காக இடத்தை மாற்றுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்தன.
 
ஆனால் அந்த செய்தி பொய் என்றும், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும் என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்