விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஒரே நாளில் களமிறங்கி டிரெண்ட் அடித்த விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் படத்தின் பாடல்கள்

  | August 30, 2017 16:45 IST
Velaikkaran Songs

துனுக்குகள்

  • டிரையிலர், பாடல்களை வெளியிடுவது விளம்பர யுக்திகளாக கையாளப்பட்டு வருகிறது
  • ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்…’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது
  • ‘நீதானே’ மற்றும் ‘மெர்சல் அரசன்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது
இன்றைய காலக்கட்டத்தின் மாற்றத்தாலும் தொழில்நுட்ப புரட்சியாலும் இணையதளங்களில் திரைப்படங்களின் டீஸர், டிரையிலர், பாடல்களை வெளியிடுவது புதிய விளம்பர யுக்திகளாக கையாளப்பட்டு வருகிறது. அவ்வாறாக வெளியிடப்படும் வீடியோக்களை பகிர்ந்து அதனை டிரெண்டாக்கி அவரவர் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வரிசையில் நேற்று 'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய இரண்டு பாடல்களின் ஆடியோ அடங்கிய வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது. இது இணையதள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று அதிக அளவில் பகிரப்பட்டு டிரெண்டாகி உள்ளது.

இது போலவே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் 'ஜெயம்' மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்…’ என்ற பாடல் வரிகள் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இதுவும் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 'தளபதி' விஜய் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி திரைப்படங்களின் பாடல்கள் வெளியிட்டு இருப்பது, இணையதள ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்