விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஜய் ஆண்டனி டபுள் ஆக்ஷனில் அசத்தும் ‘அண்ணாதுரை’ டிரையிலர்

  | October 11, 2017 22:23 IST
Annadurai Movie

துனுக்குகள்

  • விஜய் ஆண்டனி கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இதில் விஜய் ஆண்டனி டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இப்படம் தமிழ் & தெலுங்கிலும் தயாராகி வருகிறது
ஜீவா ஷங்கரின் ‘எமன்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கால்ஷீட் டைரியில் கிருத்திகா உதயநிதியின் ‘காளி’ மற்றும் ஸ்ரீனிவாசனின் ‘அண்ணாதுரை’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மகிமா, ஜுவல் மேரி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்.

முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகை ராதிகா சரத்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘R ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் (இந்திரசேனா) தயாராகி வரும் இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

சமீபத்தில், படத்தின் தமிழ் வெர்ஷன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராதிகாவும், தெலுங்கு வெர்ஷன் போஸ்டரை நடிகர் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும் வெளியிட்டனர். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்