முகப்புகோலிவுட்

விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஷூட்டிங் ப்ளான்

  | February 09, 2018 11:49 IST
Thimiru Pudichavan Movie

துனுக்குகள்

  • இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் (ரோஷகாடு) உருவாகவுள்ளது
  • விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார்
  • நிவேதாவும் காக்கி சட்டை அணிந்து போலீஸாக மாஸ் காட்டவுள்ளாராம்
ஸ்ரீனிவாசனின் ‘அண்ணாதுரை’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கிருத்திகா உதயநிதியின் ‘காளி’ மற்றும் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக வலம் வரவுள்ளாராம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு (ரோஷகாடு) என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் டூயட் பாடி ஆடவுள்ளார். நிவேதாவும் காக்கி சட்டை அணிந்து போலீஸாக மாஸ் காட்டவுள்ளாராம். மேலும், மிரட்டலான வில்லன் வேடத்தில் டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளார்.

விஜய் ஆண்டனியே இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி படத்திற்கு பூஜை போடப்பட்டது. படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ஷூட்டிங்கை வருகிற மார்ச் 1-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை இந்தாண்டு (2018) ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்