முகப்புகோலிவுட்

‘தளபதி 62’வின் ரிலீஸ் தேதி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்

  | January 19, 2018 17:20 IST
Ar Murugadoss Next Film

துனுக்குகள்

  • விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார்
  • ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் காம்போவில் உருவாகும் 3-வது படம்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.

ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.
தற்போது, படத்தின் ஷூட்டிங் இன்று (ஜனவரி 19-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். இதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்