விளம்பரம்
முகப்புகோலிவுட்

'நடிகையர் திலகம்' படத்தின் மோஷன் போஸ்டர்

  | April 13, 2018 10:39 IST
Nadigaiyar Thilagam

துனுக்குகள்

  • இதில் ‘சாவித்ரி’யின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் வலம் வரவுள்ளார்
  • விஜய் தேவரகொண்டா, சமந்தா இடம்பெறும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
  • இதன் டீசரை நாளை (ஏப்ரல் 14-ஆம் தேதி) ரிலீஸ் செய்யவுள்ளனர்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாரை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். சாவித்ரி 1950, 60-களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார். ஆகையால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா ரிப்போர்டராக வலம் வரவுள்ளாராம். அவருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். ஷாலினி பாண்டேவுக்கு சாவித்ரியின் தோழி ஜமுனா கதாபாத்திரமாம். நாகேஸ்வர ராவ் வேடத்தில் நாகசைத்தன்யா நடித்துள்ளார்.‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

மிக்கி.ஜே.மேயர் இசையமைத்து வரும் இதற்கு டேனி சஞ்செஸ்-லோபெஸ் (DANI SANCHEZ-LOPEZ) என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, விஜய் தேவரகொண்டா (விஜய் ஆண்டனி), சமந்தா (மதுரவாணி) இடம்பெறும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் டீசரை நாளை (ஏப்ரல் 14-ஆம் தேதி)-யும், படத்தை வருகிற மே 9-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்