விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஜய்யுடன் 4-வது முறையாக கைகோர்த்த ஸ்டைலிஸ்ட்

  | April 21, 2017 18:21 IST
Vijay 61 Movie

துனுக்குகள்

  • விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்
  • சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என 3 ஹீரோயின்ஸ்
  • ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்
‘தெறி’ படத்திற்கு பிறகு மீண்டும் இளைய தளபதி – அட்லி இணைந்துள்ள ‘விஜய் 61’ படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் தினமும் வந்த வண்ணமுள்ளது. விஜய் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்து வரும் இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத்தும் விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளாராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசுவாமி பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில் இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
 

தற்போது, நான்காம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோமல் சஹானி ஸ்டைலிஸ்ட்டாக கமிட்டாகியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் வகையில் கோமல் தனது ட்விட்டர் பக்கத்தில், இளைய தளபதியுடன் ஒரு செல்ஃபியும் எடுத்து ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இவர் விஜய்யின் ‘ஜில்லா, துப்பாக்கி, தெறி’ ஆகிய 3 படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஏற்கெனவே, பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜ் கோனாவும் ‘விஜய் 61’யில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்