முகப்புகோலிவுட்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறாரா விஜய்?

  | March 27, 2018 10:56 IST
Vijay 62

துனுக்குகள்

  • இது விஜய்யின் கேரியரில் 62-வது படமாம்
  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்
  • விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை விஜய் பாட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் ‘உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும், அவரின் இசையில் ‘தளபதி’ பாடவிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்