முகப்புகோலிவுட்

'தளபதி 62' செட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய் – வைரலாகும் வீடியோ

  | March 23, 2018 11:14 IST
Thalapathy 62

துனுக்குகள்

  • இது விஜய்யின் கேரியரில் 62-வது படமாம்
  • ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே கூடிய ரசிகர்களை விஜய் நேரில் சந்தித்தார்
  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் நேரத்திலும் ஸ்பெஷல் பெர்மிஷன் பெற்று சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே கூடிய ரசிகர்களை விஜய் நேரில் சந்தித்து அவர்களை குஷி படுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்