விளம்பரம்
முகப்புகோலிவுட்

கருப்பனுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி

  | August 10, 2017 19:32 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி கைவசம் 13 படங்கள் உள்ளது
  • இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் செம லைக்ஸ் குவித்தது
புஷ்கர் – காயத்ரியின் ‘விக்ரம் வேதா’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கைவசம் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘புரியாத புதிர்’, சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல் & மாமனிதன்’, பிரேம் குமாரின் ‘96’, பன்னீர் செல்வமின் ‘கருப்பன்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘அநீதி கதைகள்’, ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, அருண் குமார் படம், பாலாஜி தரணீதரனின் ‘சீதக்காதி’, கோகுலின் ‘கஞ்சன் ஜங்கா’, சேரன் படம், பிஜு விஷ்வநாத் படம், மணிரத்னம் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பலே வெள்ளையத் தேவா’ புகழ் தான்யா டூயட் பாடி ஆடியுள்ளார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். மேலும், கிஷோர், பசுபதி,சிங்கம்புலி, சரத் லோஹிதஸ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு RA.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், VT.விஜயன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, விஜய் சேதுபதி தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியது. சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரையிலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற செப்டெம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்